May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்


இந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்று முதலிடம்… சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் இரண்டாமிடம்… ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் மூன்றாமிடம்…இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் 7 பதக்கங்களுடன் 48-வது இடமும் பெற்றுள்ளன.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம்.. மகளிருக்கான பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி.. ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் ரவி குமார் தஹியா வெள்ளி… மகளிர் குத்துச் சண்டையில் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம்.. பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெண்கலம்.. ஆடவருக்கான 65 கிலோ மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா வெண்கலம்… ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது. அதிக பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது இதுவே முதன்முறை. பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்காகப் போராடி மயிரிழையில் தவறவிட்டதையும் நம் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு நமது வாழ்த்துகள். வரும் காலத்தில் அரசும் மக்களும் மேலும் அதிக முக்கியத்துவத்தைத் தர வேண்டியது அவசியம்.

Spread the love