May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சாமிகள்

கோவிலில் சாமிகள்
குடியிருக்கின்றனவோ என்னவோ
வெளவால்களோடு சேர்த்து
அத்தனை சாதிகளும் குடியிருக்கின்றன

சாதி இரண்டொழிய வேறில்லை
என்று பாடிய மூதாட்டி இன்றிருந்திருந்தால்
சாதி இரண்டாயிரமொழிய வேறில்லை
என்று பாடியிருப்பாள்
தங்கேஸ் – தமுஎகச, தேனி

Spread the love