June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

க. சிவசங்கர் பதில் அளிக்கிறார்

ஜூன் 8 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டத்தில் (Monetary Policy Committee) ரெப்போ ரேட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற மாத துவக்கத்தில் ரெப்போ ரேட் 0.40 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வங்கிகளின் ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தையும் (CRR) 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

1. ரெப்போ ரேட் என்றால் என்ன?

ரெப்போ ரேட் என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடனாகப் பெறும் பணத்திற்கான வட்டி விகிதமாகும். எனவே இதன் அளவு அதிகரிக்கும்போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வட்டி விகித உயர்வை அறிவிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் மொத்த பணவீக்‍கம் 6.7 சதவீதம் இருக்‍கும் என்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 7.2 சதவீதம் இருக்‍கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2. பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை களின் பொதுவான நிலை அதிகரித்து, அதன் விளைவாக, நாண யத்தின் வாங்கும் திறன் (மதிப்பு) குறைவது. பொருட்களின் விலைக ளுடன் வருமானம் அதிகரிக்கவில்லை என்றால், ஒரு நபரின் வாங்கும் திறன் குறைகிறது. இதுவே பணவீக்கம்.

3. ரெப்போ ரேட் உயர்வால் பணவீக்கம்  எவ்வாறு கட்டுக்குள் வரும்?

“ரிசர்வ் வங்கி தனது கடனுக்கான வட்டியை உயர்த்தும்போது வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக் கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மக்கள் வங்கியில் வாங்கும் புதிய கடன்களின் அளவு குறையும். மக்கள் தங்கள் செலவினங்களை சுருக்கத் தொடங்குவார்கள். மறுபுறம் இந்த அறிவிப்பின் மூலம் வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் உயரும். இதனால் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் பணத்தை வங்கிகளில் சேமிப்பாக மாற்று வார்கள். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் விளைவாக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் கணிசமான அளவில் குறைந்து வங்கிக்கு திரும்பும் எனவும், இதன் மூலம் பணவீக்கம் குறையும்” என்றும் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. ஆனால் இது உண்மையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. ஏனெனில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை வணிக வங்கிகள் ரெப்போ ரேட் உயர்வதற்கு ஏற்றாற்போல் உயர்த்துவது இல்லை. மறுபுறம் ஏற்கனவே 70 சதவீத மக்கள் கையில் சேர்த்து வைக்க எதுவும் இல்லை. அவர்களின் வாழ்க்கை கைக்கும் வாய்க்குமாகவே உள்ளது. அவர்கள் பெரும்பாலும் கடனை நம்பியே வாழ்கிறார்கள். வட்டி விகிதம் உயரும்போது, தவணைத் தொகை உயரும். இதனால் அவர்கள் புதிதாக கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

4. இந்த வட்டி உயர்வு சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளிகளை எவ்வாறு பாதிக்கும்?

ஓரளவிற்கு மேல் பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் போகும்போது, வணிகர்கள் தங்களின் செலவீனங்களைக் குறைக்கத் துவங்கி, தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதி யத்தில் கை வைப்பார்கள். ஏற்கனவே கொரோனா பாதிப்பில் வேலை யிழப்பு மற்றும் சம்பள குறைப்பில் தவித்த சாமானிய தொழிலாளர்கள், இப்போது மேலும் இன்னலுக்கு உள்ளாவார்கள். இதனால் அவர்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடையும். இதனால் சந்தையின் பொதுவான கிராக்கி குறைந்து உற்பத்தியான பொருட்களின் விற்பனையில் ஒரு பெரிய தேக்கம் உருவாகும். இது நாட்டின் பொருளாதாரச் சுழற்சியை மேலும் மேலும் வெளிவர முடியாத சுழலுக்குள் சிக்க வைக்கும்.

5. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

மக்கள் கைகளில் புழங்கும் பணப்புழக்கமே பணவீக்கத்திற்கும், அதன் மூலம் ஏற்படும் விலைவாசி உயர்விற்கும் காரணம் என்ற தவறான பொருளாதாரப் பார்வையில் இருந்து அரசாங்கங்கள் மாற வேண்டும். கடந்த 18 மாதங்களில் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் மீதான அதிதீவிர வரி உயர்வும் அதனால் ஏற்பட்ட கச்சா பொருட்களின் விலையேற்றமுமே பணவீக்கத்திற்கு மிகமுக்கிய காரணங்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். எனவே பெட்ரோல், டீசல் மீதான வரியை கணிசமாக குறைக்க வேண்டும். அதை ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும். மேலும் பணவீக்கம் மற்றும் விலைவாசியை குறைக்க மக்களின் வாங்கும் சக்தியை  அதிகரிக்க வேண்டும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் எனில், அரசாங்கம் தனது செலவினங்களை அதிகரித்து பொது முதலீட்டின் அளவை  உயர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான கூலி மற்றும் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் வேலை யிழப்புகள் அதிகரிக்கும் நகர்ப்புற பகுதிகளுக்கும் இந்த திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

8. இதற்கான வருவாயை எவ்வாறு திரட்டுவது?

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெருமுதலா ளிகள் வாங்கிய கடன்களை முறையாக வசூலிப்பதன் மூல மும், கார்ப்பரேட் வரிகளை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்த்துவதன் மூலமும் இதற்கான நிதியை அரசாங்கத்தால் திரட்ட இயலும். அரசாங்கம் மக்கள் அனைவருக்கும் பொது வான மாற்று பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்குவதன் மூலம் மட்டுமே இந்த சிக்கல்களில் இருந்து மீள முடியும்.

(தீக்கதிரில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

Spread the love