May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கூடையின் பாரமும், மனதின் சோர்வும்

கூடையின் பாரம் குறையவில்லையே
மனதின் சோர்வும் அகலவில்லையே
அனுதினமும் வயிறுப் பிழைப்பிற்கு
மல்லுக்கட்டி நிகழும் போராட்டம்
தொடர்கதையாக தொடர்கின்றதே
எங்களின் போராட்டம்..

கவலை வேண்டாம் தாயே
உங்கள் மயக்கத்திற்கு
காரணம் என்னவென
அறிந்து வருந்தினோம்
அம்மா இனி ஒரு போதும்
உங்களிடம் விவாதம் செய்யோம்..
பேரம் பேசோம்..
மனப்பாரம் விலக்கி
உவகையுடன் சென்று வா சகோதரியே..
அனைவருக்கும் படியளக்கும்
பிரபஞ்ச சக்தி உனது குறையும்
போக்கும் மரகதமே..!


எம்.ஆர்.வி. ஜீவா ( 9944087578)

Spread the love