May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

குருகும் உண்டு

ஆசிரியர் : பிரகஸ்பதி, 54, பூரம் பிரகாசம் சாலை,
ராயப்பேட்டை, சென்னை-14 விலை: ரூ.500/-
சங்கக் கவிதைகள் சின்னஞ்சிறு பாடல்களில் பண்டைத் தமிழர் வாழ்வியல் அழகையும், அன்பின் மிளிர்வையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை 401 அருமையான அகப் பாடல்களின் தொகுப்பாகும். இவற்றில் 204 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ‘குருகும் உண்டு’ என்ற குறுந்தொகைப் பாடல் ஒன்றின் அழகிய சொல்லாடலையே நூலுக்குத் தலைப்பாக்கி யாவரும் இன்புறும் வண்ணம் இலக்கிய விருந்து படைத்துள்ளார் ஆசிரியர் பிரகஸ்பதி. தொல்காப்பியரின் களவியல், கற்பியல் இரண்டுக்குமான கோட்பாடுகளைக் கடைப்பிடித்தே குறுந்தொகை உட்பட அனைத்து சங்க இலக்கியப் பாடல்களும் இயற்றப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். குறுந்தொகை எழுதப்பட்ட காலம், தொகுப்பு முறை, அமைப்பு ஆகியன குறித்த செய்திகளுடன் பாடல்களில் காணப்படும் கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல், உடன் போதல், பொதுமலர் வரைவு போன்ற அருஞ்சொற்களுக்கு பொருள் விளக்கமும் தந்துள்ள ஆசிரியர் நம் பாராட்டுதல்களுக்குரியவர். புதிய ஆசிரியனின் வாழ்த்துகள்!
( நூலாசிரியர் புதிய ஆசிரியன் இதழுக்கு சந்தாதாரர் ஆக சேருவோருக்கு ஒரு சலுகை தருகிறார். 500 ரூபாய் தொகையை அவருடைய எண்ணான 94441 87997-க்கு ஜி-பே மூலம் அனுப்பினால் அவர் குருகும் உண்டு நூலை அனுப்புவதோடு புதிய ஆசிரியன் இதழுக்கு ஓராண்டு சந்தாவையும் செலுத்தி விடுவார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)
பேரா. பெ.விஜயகுமார்

Spread the love