September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ராஜகுரு பதில்கள் மத்திய அரசா, ஒன்றிய அரசா..? முடிவு எப்போது என்றுதான் தெரியவில்லை

சி.அ.முருகன், திருவண்ணாமலை.

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சரியா? சரியெனின் சிலர் அதை எதிர்ப்பது ஏன்?

‘மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா (ருniடிn டிக ளுவயவநள)’ என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது என்று சொல்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். இந்திய அரசை ‘மத்திய அரசு’ என்று அழைப்பதுதான் சரி என்று பாஜகவினரும், ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதுதான் சரி என்று தமிழக முதல்வரும் சில நாட்கள் வாதிட்டனர். இந்தியாவை ஒற்றை ஆட்சியாக்கி மாநிலங்களை எந்தவித அதிகாரமும் அற்ற வெறும் பொம்மைகளாக ஆக்க வேண்டும் என்பதுதான் மோடி-ஆர்எஸ்எஸ் அரசின் இலக்கு. நாம் செய்த தவறு, 1950-லிருந்தே ஒன்றிய அரசு என்று அழைக்காமல் மத்திய அரசு என்று அழைத்து வந்ததுதான். மோடி அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு இப்போதாவது விழித்துக் கொள்வோம் என்று தமிழகம் எடுத்த சரியான முடிவுதான் இது.

மாலதி சுப்பிரமணியன், சென்னை -51

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுவது இந்தியாவின் பண்பாடு என்கிறார் நமது பிரதமர். உண்மையிலேயே அப்படி இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுபவர், அந்தக் குடும்பத்தில் முஸ்லிம்களைச் சேர்க்க மட்டும் ஏன் மறுக்கிறார்..? கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கும் சிறிது இடம் கொடுக்கலாமே..?

எஸ்.விஸ்வநாதன், மதுரை-10

அண்மையில் தங்களை மிகவும் பாதித்த செய்தி..?

கொரோனா காரணமாக இந்தியாவில் 19 லட்சம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை (தாய் தந்தை இருவரில் ஒருவர் அல்லது இருவரையுமே) இழந்துள்ளனராம். அரசு நிதி உதவி செய்து அந்தக் குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு உட்பட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் விடுதிகள் தரப்பட வேண்டும். தாய், தந்தையர் இழப்பை இவை ஈடு செய்துவிட முடியாது என்றாலும் அரசின் குறைந்தபட்சக் கடமை இது.

அரவிந்தன், கோவை

எல்லாப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘உளவு பார்த்தல்’ பிரச்சினை முன்னுக்கு வந்துவிட்டதே?

மோடி அரசின் இலக்கணமே அதுதான். ஒரு கோரிக்கையின் மீது நாம் குரல் எழுப்பிக் கொண்டிருப்போம். அது பற்றி முடிவெடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமலேயே அடுத்த தாக்குதலைத் தொடுப்பார் மோடிஜி. அது போதாதென்று மக்கள் எழுப்பும் பிரச்சினைகள் மீது சில அவதூறுகளை அள்ளி சங்பரிவாரத்தினர் வீசுவார்கள். எந்த பதிலும் சொல்லாமல் மோடி மவுனமாகக் கடந்துசென்று விடுவதும் உண்டு. இந்த நாடகம் ஒரு சங்கிலித் தொடர்போல ஏழாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. வேளாண் பிரச்சினை, திரைப்படத் தணிக்கைப் பிரச்சினை, கூட்டுறவு வங்கிகள் பிரச்சினை, வங்கிகள் மற்றும் பொது இன்சூரன்ஸ் தனியார்மயப் பிரச்சினை, ஸ்டான் சுவாமி படுகொலை போன்ற எண்ணற்ற அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே புதிதாக ஒரு அலை மேலெழும்பி வரும். தற்போது ஓடிக் கொண்டிருப்பது, இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் உளவு மென்பொருள் நடத்தும் லீலைகள்தான். 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேர்களின் செல்ஃபோன் உரையாடல்கள் 2017-ம் ஆண்டிலிருந்தே உளவு பார்க்கப்பட்டு வருகின்றனவாம். இந்த வரிகளை நான் ஜூலை 24-ம் தேதி டைப் செய்து கொண்டிருக்கிறேன். இதழ் உங்கள் கைக்கு வரும்போது வேறொரு அலை எழும்பியிருக்கும். இதற்கெல்லாம் முடிவு எப்போது என்றுதான் தெரியவில்லை.ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
32-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 அன்று தொடங்கியது. சனியன்று நடந்த மகளிர் பளுதூக்குதல் பிரிவில் (49 கிலோ) பளு தூக்குதல் பிரிவில், 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார் மணிப்பூரின் மீராபாய் சானு. வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த சானு, தனது தளரா முயற்சியினால் சாதித்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துகள்!

Spread the love