சொன்னதெல்லாம் நாங்க மறந்திடுவோம்…
இனி, புதுசா செய்யக் கிளம்பிடுவோம்…
விவசாயிக்கு வருமானம் இரட்டிப்பு,
விதை, உரம் வாங்க மானியம்,
பயிர்ப் பாதிப்புக்கு இழப்பீடு…
சத்தியமாகச் செய்வோம்; இது நிச்சயம்.
பெண்களைப் போற்றுவோம்,
வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்,
வேலைவாய்ப்பில் சிறப்பிடம் தருவோம்…
இதையும் செய்வோம்; இன்னமும் செய்வோம்.
விலைவாசியைக் குறைப்போம்,
வங்கிக் கணக்கில் பணம் கொடுப்போம்,
வறுமையை இல்லாமல் ஒழிப்போம்,
ஊழலில்லா ஆட்சி அமைப்போம்…
இதுமட்டுமா நாங்க சொன்னோம்…
இன்னும் என்னென்னமோ சொன்னோம்!
சொன்னதெல்லாம் மறந்துப்புட்டு
எங்க அஜெண்டாவையே செஞ்சோம்!!
யாரு நம்மைக் கேட்கிறதுன்னு
தலைகால் புரியாம ஆடுனோம்!
விவசாயிக கொடுத்த அடியிலே
இப்ப கவுந்தடிச்சு விழுந்தோம்!!
கைவசம் வச்சிருக்கோம் விதவிதமா
தேச பக்த முகமூடிகளை…
எடுத்து மாட்டிக்கிட்டு வர்றோம்…
மறக்காம கழட்டி வைச்சிடுங்க
நீங்க உங்க மூளைகளை.
- மு.முருகேஷ் ( 94443 60421 )
More Stories
என்னத்தைச் சொல்ல..?
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்
சாமிகள்