தியான மடம் …
சுய ஆய்வுக்குரிய
தியான மடம்
சவரக்கடை.
ஆளற்ற நேரம் பார்த்து,
நாற்காலியில் சாய்ந்து
கண்களை மூடிக்கொண்டேன்
புதராய் மண்டிய தாடியில்,
சோப்புநுரை பரவினார்
சவரத்தொழிலாளி.
மனதினுள்ளே
மனிதர் இருவர்,
எதிரெதிரே நின்று
காலையில் நடந்த
கடும் வாக்குவாதத்தில்,
நான் மனைவியை
அறைந்ததை ஆய்வு செய்தனர்.
Spread the love
More Stories
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்
சாமிகள்
பழைய கதையும் புதிய கூட்டணியும்…