September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வி தொலைக்காட்சி பற்றி விழிப்புணர்வு

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மேலாக விடுமுறை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒளிபரப்பு அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் பாடங்கள் ஒளிபரப்பாகும் நேரம், தொலைக்காட்சி பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை அறியும் வகையில் தகவல்களுடன் கூடிய விழிப்புணர்வு நகல்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்கப்படுகின்றன. அத்துடன், தொலைபேசி மூலம் மாணவர்களுடன் தினமும் காலையில் தொடர்பு கொண்டு கல்வி தொலைக்காட்சி பார்க்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். விளைவாக, பெரும்பாலான மாணவர்கள் தொடர்ந்து கல்வி தொலைக்காட்சியைப் பார்த்து பயிற்சிகளைச் செய்து வருகின்றனர். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.
லெ.சொக்கலிங்கம் (த.ஆ., தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி – 9786113160)

Spread the love