August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்விசார் ஏபிசி கிரெடிட் சிஸ்டம்.. பு.க.கொ. 2020?

தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு வடிவங்கள் தமிழகத்தின் பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதைத் தொடர்ந்து உரையாடி வருகிறோம். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட வரையறைகளுடனான திட்டமிடலுடன் கூடிய நடைமுறை இருந்து வருகிறது.
ஆனால் உயர்கல்வியில் பல்கலைக்கழக மானியக்குழுதான் முடிவு எடுக்கிறது. அதனை இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வருகின்றது.இப்படியான சூழ்நிலையில் உயர்கல்விக்காக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டம் கல்விசார் கிரெடிட் வங்கி திட்டம் (ஹஉயனநஅiஉ க்ஷயமே டிக ஊசநனவை ளுஉhநஅந) தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த பின்னர் அதன் ஒரு அங்கமாகவே தேசிய உயர் கல்வித் தகுதிக் கட்டமைப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில், இளநிலை, முதுநிலை, பட்டப் படிப்புகளின் காலம், அதனுடைய பாடத்திட்ட வடிவமைப்பு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.ஆனால் அந்த பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஏற்கனவே நடைமுறையில் உள்ள கற்பித்தல் கற்றல் செயல்முறைக்கு பதிலாக புதிதாக ஒரு நடைமுறையை யுஜிசி அறிவித்திருக்கிறது. அதற்கான நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்த தேசிய உயர் கல்வித் தகுதி கட்டமைப்பு என்பதனை எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் லெ.ஜவஹர் நேசன். இவர் நமது மாநில கல்வி கொள்கை உருவாக்கும் குழுவில் ஓர் உறுப்பினர். ஏபிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திட்டம் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் படிக்கக்கூடிய மாணவர், தாம் பயிலும் பாடத்திட்டத்தில் உள்ள 70 சதவீத பாடங்களை பிற பல்கலைக்கழகங்களிலும் அல்லது தன்னாட்சிக் கல்லூரிகளிலும் படிக்கலாம் என்று கூறுகிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஏபிசி வங்கித் திட்டத்தில் முதலில் இணைய வேண்டும். பின்பு அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தாமாக இத்திட்டத்தின் வழியாக பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பாடங்களை எடுத்துப் படிக்க வழிவகை ஏற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த மாதிரியான உயர்கல்வியை இனி வரக்கூடிய காலங்களில் இணையவழியில் மட்டுமே படிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக நாம் புரிந்து கொள்ளலாம். அதேபோல பலமுறை வெளியேறுதல் அல்லது உள்நுழைதல் (ஆரடவiயீடந நுஒவை யனே நுவேசல) என்ற முறையின் மூலமாக ஒரு மாணவர், தாம் பயிலும் இளங்கலைப்

பாடத்திட்டத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறலாம், எப்பொழுது வேண்டுமானாலும் உள்நுழையலாம் என்றும் தேசிய கல்விக் கொள்கை அறிவுறுத்தியிருந்தது.
இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துதல் என்பது புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே என்று நமக்கு தெளிவாகப் புலனாகிறது. இந்த ஏபிசி கிரடிட் சிஸ்டமானது பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை, பாடத்திட்டம் வகுக்கும் முறையை சீர்குலைக்கும் திட்டமாக இருப்பதாகப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்கின்றனர்.
இந்த ஏபிசி கிரெடிட் சிஸ்டமானது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக மாணவர்கள் நேரடியாக வேறு இரண்டு கல்லூரிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் கற்று வந்ததை இணைய வழிக் கல்வியாக மாற்றம் செய்கிறது. அவ்வாறு செய்யும்பொழுது பல்கலைக்கழக ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அறிவுச்செறிவோ, நேரடி அனுபவமோ எதுவுமே பெற முடியாமல் போய்விடும் என்றும் அஞ்சுகின்றனர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
இதுபோன்ற முறைகளால் உயர்கல்வி மிகவும் நீர்த்துப் போகக் கூடிய சூழல் உருவாகும். ஏற்கனவே இணையவழியில் கற்றல் அனுபவம், கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு உண்டு. அதன் வழியாகக் கற்ற மாணவர்கள் நேரடித் தேர்வுகளை அணுகுவதற்கு மிகவும் அச்சப்பட்டு அது ஒரு சவாலான வேலையாக அவர்களுக்கு அது அமைந்தது.
உதாரணத்திற்கு, தலைசிறந்த பல்கலைக்கழகங்களான, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், ஐஐஎம்கள், ஐஐ.எஸ்சி-பெங்களூர் போன்றவற்றிலும் கல்விசார் கிரெடிட் வங்கிக் கல்வித் திட்டத்தின் மூலமாக ஒரு மாணவர் சேரலாம் என்று பேச்சுக்கு வைத்துக் கொண்டால் கூட, நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்குவதை ஏபிசி திட்டம் எவ்வாறு உறுதிப்படுத்த இயலும்? ஒரு மாணவன், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் கல்விக் கட்டணம் செலுத்துவது என்பது நடைமுறை சாத்தியமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே ஏபிசி சிஸ்டம் என்பது ஏற்கனவே வியாபாரமாகிவிட்ட கல்வியை மேலும் அதிக தீவிரமான வியாபாரத் துறையில் செலுத்தி முதல் தலைமுறை மாணவர்களோ அடித்தட்டு மக்களோ படிக்க விடாமல் செய்யும் ஒரு தந்திரம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிக் கல்வியை போலவே கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் நியமனம் போதுமான அளவு இல்லாமல் பற்றாக்குறையாக இருக்கிறது என்று

மாணவர்களும் பேராசிரியர்களும் கூறுகின்றனர். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆனாலும் சரி, மாநில பல்கலைக்கழகங்கள் ஆனாலும் சரி பெரும்பாலும் புதிய பட்டப்படிப்புகள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுவிட்டன. இவையெல்லாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வந்தவையே. அவ்வாறு கொண்டுவரப்பட்ட பாடப்பகுதிகள், படிப்புகள், அவற்றுக்கு வழங்கவேண்டிய நிதி ஒதுக்கீடு எல்லாம் பெருமளவில் குறைக்கப்பட்டு அல்லது நிறுத்தப்பட்டு கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பெரும் வீழ்ச்சிக்கு ஆளாகி வருகின்றன.
இதன் காரணமாக அரசு கல்வி நிறுவனங்கள் தேசிய அளவிலான தரப்பட்டியலில் தரம் குறைந்து வருகின்றன. தனியார் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தங்கள் தரத்தை உயர்த்துவது போல காண்பித்து தரப் பட்டியலில் உயர்ந்து வரக்கூடிய சூழல் நாடு முழுவதும் நடந்து வருகின்றது. ஆகவே இந்த ஏபிசி கிரடிட் சிஸ்டம் என்பது நம் நாட்டிற்கு தேவையற்ற ஒரு திட்டமாகும். அடித்தட்டு மக்களை கல்வியில் இருந்து விலகிச் செல்ல ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு கல்வி மீது அக்கறை கொண்டவர்கள் யாவரும் தமது எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

(அகில இந்தியக் கல்விப் பாதுகாப்பு கமிட்டி நடத்திய கூட்டத்தில் பேரா. லெ.ஜவகர் நேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்)

உமா அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (m3) –
[email protected] – 99769 86098)

Spread the love