June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்விக்கு செலவு செய்துதானே ஆகணும்?

பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ. 31,000 கோடி சம்பளத்திற்கே செலவாகிவிடுகிறது.. அப்புறம் எப்படி கட்டமைப்புக்குச் செலவிட முடியும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்படியானால் கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம்தான் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.. அதை விடுத்து ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக் கல்வி என்றால் அது ஆன் லைன் கல்விமுறைதான்.. அமைச்சர் அதைத்தான் குறிப்பிடுகின்றாரோ ?
-பொ. ராஜமாணிக்கம் ( த.நா.அறிவியல் இயக்கம்-9698025569)
ஜ கல்வி, மருத்துவம் என்பது அடிப்படை உரிமை என்று பார்க்காமல் செலவாகப் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களே… ?….அப்படின்னா …
என்ன பண்ணலாம் சார்? கல்வித் துறையையே இழுத்து மூடி விடலாமா?
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கேட்டால், சம்பளமே 31 ஆயிரம் கோடி ரூயாய் என்று கூறுகிறீர்கள்.. கல்விக்கு செலவு செய்துதானே ஆகணும்? மக்கள் ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் கட்டும் கல்வி வரி 3 சதம் செஸ் எல்லாம் இந்த 33 ஆயிரம் கோடியில் வருகிறதா? இந்த பதிலை சொல்வதற்காகவா தவமாய் தவமிருந்து விடியல் தரும் மக்களின் முதல்வரை மக்கள் நம்பினார்களா …
நேரடியாக நீங்கள் கூறுவதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? இனிமேலும் ஆசிரியர்களைப் புதியதாக நியமிக்க மாட்டோம் எனக் கூற வருகிறீர்களா? கட்டமைப்பு, மற்ற வசதிகளுக்கு பணமில்லை, அரசுப் பள்ளிகளை அத்துவானத்தில் விடப் போகிறீர்களா?
வெறும் திட்டங்களாகப் போட்டு, ஊழல் பெருத்து அனுபவிக்கும் அதிகார வர்க்கங்களைக் கண்டு கொள்ளாமல், பள்ளிக் கல்வியை சிதைத்து விளிம்பு நிலை மக்களின் எதிர்காலக் கனவைப் புதைக்க முடிவு செய்து விட்டீர்களா ?
என்னவென்று எடுத்துக் கொள்வது உங்கள் வாக்கு மூலத்தை ….
உமா (அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3)-99769 86098)
ஜ ரூ.3000/- த்துக்கு பெயிண்ட் வாங்கினாலும், பெயிண்டருக்கு ரூ.4000 சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கணக்கு பார்த்தா, பெயிண்ட் கடையிலேயே இருக்கும், வீடு பாசி பிடிச்சி அழுக்காவே இருக்கும்…அறியாமை அழுக்கை அகற்றி அறிவெனும் புது பெயிண்ட் அடிக்க ஆசிரிய, அலுவலர்களுக்கு சம்பளம் கொடுத்துதான் ஆகணும்.. பட்ஜெட் போடும்போதே எத்தனை கோடி சம்பளம் என்பது தெரியும்தானே? அதையும் பள்ளிகளை மேம்படுத்த ஆகும் செலவையும் சேர்த்து ஒதுக்கீடு செய்யலாமே!!
-மனோகரன் (டான்சாக், மதுரை- 9843427857)
(புதிய ஆசிரியன் வாசகர்கள் குழுவில் வந்த பதிவுகள்)

Spread the love