கலப்பு கற்றல் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே எம்ஏ, எம்எஸ்ஸி, எம்பிஏ, எம்சிஏ, பிகாம், பிபிஏ, பிசிஏ வகுப்புகளை முதல் கட்டப் பரிசோதனையாக 31 உயர்கல்வி நிறுவனங்களில் முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்திட யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. கல்லூரிகளை, ஆசிரியர் பதவிகளைக் காப்பாற்றிடப் போராடத் தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே துயர்துடைக்கும். தெருவில் இறங்கிப் போராடினால் மட்டுமே விடியல் உண்டு. ஆன்லைன் வகுப்புகளை ஆன்லைன் கூட்டங்கள் நடத்தித் தடுத்து நிறுத்த முடியாது நண்பர்களே! ஆபத்து நெருங்கிவிட்டது. விழித்துக்கொள்வோம்! இல்லையேல் கல்லூரிகளுடன் நாமும் காணாமல் போய்விடுவோம்!
பேரா.பெ.விஜயகுமார்
Spread the love
More Stories
நடக்கவோ… பறக்கவோ..
வகுப்பறைக்குள்ளே ஒரு போட்டி..!
தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் குழு… வரவேற்போம்!