May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
அதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மாசு குறைப்பு.. அழகுபடுத்தல்.. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட 10 கடற்கரைகளில் தமிழக கடற்கரைப் பகுதிகள் எதுவும் இடம்பெறவில்லை.
தமிழகத்தின் கன்னியாகுமரி.. சென்னை.. மெரினா.. எலியட்ஸ்.. நீலாங்கரை.. கொட்டிவாக்கம் கடற்கரைகள் உள்ளாட்சி நிதியின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு கூடுதலாக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பேசினார். புதிய ஆசிரியனின் பாராட்டுக்கள்..

Spread the love