# செல்லாத நோட்டு திட்டத்தின் மூலம் குடிமக்கள் அனைவரையும் நடு ரோட்டில் நிற்கவைத்தீர்களே.. அதில் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?
# கருப்புப் பணத்தை பிடிக்கப் போறேன்னு பொய் சொல்லி அடித்தட்டு மக்களை கண்ணீரோடு அலைக்கழித்தீர்களே.. அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா?
# நான்கு மணி நேர இடைவெளியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து பல்லாயிரம் தொழிலாளர்களை குடும்பம் குடும்பமாக தலையில் சுமையுடன் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்தீர்களே.. அது குறித்து உங்களுக்கு வெட்கம் இல்லையா?
# ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பல ஆயிரம் மக்கள் மருத்துவ மனைகளில் இறந்தார்களே அது குறித்து உங்களுக்கு வெட்கமாயில்லை?
# இந்திய ரூபாயின் மதிப்பு ஆதார பாதாளத்துக்கு போய் விட்டதே அது குறித்து உங்களுக்கு வெட்கமாயில்லை?
# இந்திய எல்லைக்குள் புகுந்து சீனாக்காரன் இரண்டு பாலங்கள் கட்டியிருக்கிறானே அது குறித்து உங்களுக்கு வெட்கமாயில்லையா?
# நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதற்காக அரபு நாடுகளின் கடும் கண்டனத்தை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறதே அது பற்றி வெட்கம் இல்லையா?
# இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நாடெங்கிலும் சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனரே.. அது குறித்து வெட்கம் இல்லையா?
உங்கள் பேச்சை எந்தக் கணக்கில் வைப்பது? (இதில் குஜராத் கணக்கை நீங்கள் சேர்க்காததால் நாங்களும் சேர்க்கவில்லை)
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…