May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்.

வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் !

போராட்டம் நடத்திய சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின்  பத்திரிகைச் செய்தி…..

விவசாயிகளுக்கு விரோதமான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதான பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். 

இவ்வறிப்பு நாடாளுமன்ற வழிமுறைகள் மூலம் நடைமுறைக்கு வருவதற்கு காத்திருப்போம்.

 ஒரு வருட காலமாக நீடித்த வரலாறு படைத்த போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகளின் தியாக மரணத்திற்கு பின்பு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

 3 வேளாண் சட்டங்களை மட்டும் எதிர்த்து விவசாயிகள் போராடவில்லை…….

விவசாய விளைபொருளுக்கு சட்டபூர்வ…..ஆதரவு விலை சட்டம் கேட்டும் போராடுகிறோம்…… என்பதை நினைவுபடுத்துகிறோம் !

 அதைப்போலவே மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் !

 விவசாயிகள் சங்கம் தனது ஆலோசனைக் கூட்டத்தில்,எல்லா நிகழ்வுகள் தகவல்களையும் கணக்கில் கொண்டு தனது அடுத்த முடிவினை அறிவிக்கும் !

Spread the love