May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எல்லோருக்குமானவரே

ஆர். ஜெயராமன்

தற்போதைய சூழல் மதவெறியும் சாதிவெறியும் கைகோர்த்துள்ள காலம். ஃபாசிசம் ஆட்சியிலமர்ந்து இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் காலம். புதுப்புது பிரச்சனைகள்..கலகங்கள்.. தூண்டல்கள் என நாளொரு மேனிக்கு இந்திய உழைக்கும் மக்கள் படும்பாடு சொல்லி மாளாதவை. அன்று அயலானிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் கூட சந்திக்காத துன்பப்புயல்கள் இன்று புதிதுபுதிதாகத் தோன்றி வீசி நம்மை அலைக்கழிக்கின்றன.
அண்ணல் அம்பேத்கர் அனைத்து உழைப்பாளி மக்களும் விடுதலை பெற வேண்டுமென எண்ணி ஆழமாகச் சிந்தித்து உலகிலேயே சிறந்ததொரு அரசியல் சாசனத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த அரசியல் சாசனம் தற்போது ஃபாசிச கொடுங்கரங்களில் சிக்கியுள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான எளிய நூலினை பேராசிரியர் முனைவர் க.கணேசன் அவர்கள் “எல்லோருக்குமானவரே” என்று தலைப்பிட்டு சிறப்பாக வெளிக் கொணர்ந்துள்ளார். புரட்சியாளரின் பன்முகச் சிந்தனையை நூல் அழகுற வெளிப்படுத்துகிறது.
இந்நூலில் அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் முனைவர் அசோக் தாவ்லே அவர்களின் கட்டுரை, சிபிஎம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்களுடைய கட்டுரை இவற்றோடு தன்னுடைய கட்டுரையையும் சேர்த்து மும்மணிகளாகக் கோர்த்து நமக்கு அளித்துள்ளார். படித்து மகிழ, பரிசளித்து பெருமைப்படுத்திட ஏற்ற நூல் இந்நூல். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இந்நூலை வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பு. புதிய ஆசிரியன் வாசகர்கள் மட்டுமின்றி அனைவர் கைகளிலும் இந்நூலினைச் சேர்ப்பிப்போம்.


பொதுப்பள்ளிக்கான மாநில மேடை – 14ஏ, சோலையப்பன் தெரு, தியாகராஜநகர், சென்னை – 600 017…

விலை ரூ.20/-
( 94421 44140)

Spread the love