September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எப்போதும் சுமைதாங்கியாக…

கடந்த ஆண்டின் எல்ஐசி-யின் பிரீமிய வருமானம் 1.84 டிரில்லியன் ரூபாய். கொரோனா காரணமாக உலகில் உள்ள எல்லா இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்த காலகட்டத்தில்தான் இந்தச் சாதனை பிரீமிய வருமானம்.
உலகின்முன் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி நிறுத்துகிற எல்ஐசி-யின் கதையை முடிப்பதற்கான மறைமுக முயற்சியை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. மக்கள் தெருவில் இறங்கிப் போராட முடியாத இந்தக் கொரோனா காலத்தை அதற்கு ஏற்ற சந்தர்ப்பமாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.
பங்கு மார்க்கெட்டில் உள்ள எல்ஐசி-யின் முதலீட்டைப் பரிசோதித்தால் எல்லாமே இந்தியாவின் அந்தந்த துறைகளில் மிகவும் முக்கியமான நிறுவனங்களாகும். நாட்டின் 21 வங்கிகளின் பங்குகளில் எல்ஐசி-யின் முதலீடு உள்ளது. எல்ஐசி-யைத் தனியார்மயம் ஆக்குவது இந்தியாவின் அனைத்து துறைகளையும் சிதைத்துவிடும். இந்தியாவின் அனைத்து துறைகளுக்கும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கும், பொதுத்துறை, தனியார் துறைகளுக்கும், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கும் எப்போதும் சுமைதாங்கியாக உள்ளது எல்ஐசி என்கிற நிறுவனம். இத்தகைய ஆலமரத்தின் கிளைகளை வெட்டுகிறார்கள்; வேர்களைப் பறிக்கிறார்கள். இத்தகைய அட்சய பாத்திரத்தை துச்சமான விலைக்கு விற்றுத் தொலைக்கிற ஒன்றிய ஆட்சியாளர்களிடம் எல்ஐசி-யைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் குறித்துப்பேசிப் புரியவைப்பது எளிதல்ல. காரணம், உறங்குகிறவரை எழுப்பலாம்; உறங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாதல்லவா?


கட்டுரையாளர்: டாக்டர் பி.ஜி,திலீப், எல்ஐசி ஏஜென்ட்ஸ் ஆர்கனைஸேஷன் ஆஃப் இந்தியா பொதுச்செயலாளர்

Spread the love