June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எப்படி, ஏன், எதற்கு?

ஜென்னிங்கிஸ் ரண்டாலப் என்ற கல்லூரி மாணவன் 1922-ல் நெப்போலியன் ஹில் என்ற மாபெரும் எழுத்தாளருக்கு எழுதிய கடிதம் :

” என் அருமை நெப்போலியன் அவர்களே,

காங்கிரஸ் உறுப்பினராக நான் பணியாற்றும் அனுபவத்தால் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றி ஆழமாக சிந்திக்க முடிகிறது. சலேம் கல்லூரியில் 1922-ம் நாள் நான் பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தபோது நீங்கள் தொடக்கவிழா உரையாற்றினீர்கள். அப்போது என் மனதில் நீங்கள் விதைத்த ஒரு சிந்தனைதான் இன்று எனது மாகாண மக்களுக்கு நான் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது. எதிர்காலத்தில் நான் எந்த வெற்றியைச் சாதித்தாலும் அதற்கெல்லாம் அந்த சிந்தனைதான் முக்கிய காரணம்.

நேற்றுத்தான் கேட்டதைப்போல் இருக்கும் உங்கள் பேச்சை நினைத்துப் பார்க்கிறேன். கையில் ஒரு டாலர் கூட இல்லாத, பள்ளிக்குப் போகாத, செல்வாக்கான நண்பர்கள் இல்லாத, ஹென்றி ஃபோர்ட் சாதனைச் சிகரத்தை எந்த வழியில் எட்டினார் என்பதை நீங்கள் அற்புதமாக விவரித்தீர்கள். நீங்கள் அந்தப் பேச்சை முடிக்கும் முன்னே என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன். எத்தனை கஷ்டங்களை நான் சந்தித்தாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் என்க்கென்று ஒரு இடத்தை நான் பிடித்துவிடுவேன் என்று முடிவு செய்தேன்.

கையில் காசு இல்லாமல், குப்பை மேட்டிலிருந்து ஆரம்பித்து சாதிக்கக்கூடியவர்கள, நஷ்டத்தை ஈடு செய்ய விரும்புகிறவர்கள் என எல்லோருக்கும், யாராவது உதவி செய்ய முடியும் என்றால் அது நீங்கள்தான். உங்கள் ஆலோசனைகளைப் புத்தகமாக வெளியிட்டால் அச்சகத்திலிருந்து வரும் முதல் பிரதியை உங்களது கையெழுத்துடன் நான் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.

நல் வாழ்த்துக்களுடன்,

அன்புடன் உங்கள்,

ஜென்னிங்கிஸ் ரண்டாலப் “

அந்தக் கல்லூரிக்கு சென்று வந்ததிலிருந்தே ஜென்னிங்கிஸ் ரண்டாலப்பின் எழுச்சியைக் கவனித்து வருகிறேன். தேசத்தின் முன்னணி விமான நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் ஆகவும், உத்வேகமளிக்கும் ஒரு மாபெரும் பேச்சாளராகவும், மேற்கு வர்ஜீனியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க செனட்டராகவும் அவர் உயர்ந்திருக்கிறார்.

நன்றி,

நெப்போலியன் ஹில்

(நெப்போலியன் ஹில் (அக்டோபர் 26, 1883 – நவம்பர் 8, 1970) ஓர் அமெரிக்க எழுத்தாளர். இவரது மிகவும் பிரபலமான திங்க் அண்ட் க்ரோ ரிச் (1937), சிறந்த விற்பனையான புத்தகங்களுள் ஒன்றாக உள்ளது. 1970 இல் ஹில் இறந்த நேரத்தில், திங்க் அண்ட் க்ரோ ரிச் 20 மில்லியன் பிரதிகள் விற்றிருந்தது.)

Spread the love