கருப்புப் பணத்தை மீட்டு,
மக்கள் கணக்கில் சேர்ப்பேனென சூளுரைத்தவர்,
டீக்கடைக்காரர்கள் கைகளிலிருந்த
சில்லறைகளையும் திருடிக்கொண்டதை
என்ன சொல்ல..?
வறுமையை விரட்டுவேன்
என்று வீர வசனம் பேசியவர்,
ஏழைகள் குடித்துக் கொண்டிருந்த
கால் வயிற்றுக் கஞ்சியையும்
இல்லாமல் செய்திட்ட கொடுமையை
என்ன சொல்ல..?
விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துவேன் என்று முழங்கியவர்,
போராடிய விவசாயிகள் மீது
காரை ஏற்றிக் கொன்றபோது
கண்மூடிக்கொண்டதை
என்ன சொல்ல..?
பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவே
திட்டங்களைத் தீட்டுவேன் என்றவர்,
மக்கள் வரிப்பணத்தில்
பல்லாயிரம் கோடிகளில்
சிலைகளை மட்டுமே எழுப்பி வருவதை
என்ன சொல்ல..?
எல்லோருக்குமான பிரதமராக
இருப்பேன் என உறுதிமொழி ஏற்றவர்,
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவரென
மக்களைப் பிளவுபடுத்தி வாக்குகள் பெறுவதை
என்ன சொல்ல..?
- மு.முருகேஷ் (94443 60421)
More Stories
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்
சாமிகள்
பழைய கதையும் புதிய கூட்டணியும்…