May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்!


ச. சுப்பாராவ்


பிரஸ்ஸல்ஸிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. கார்ல் மார்க்ஸின் வாழ்வில் முக்கியமான சில தருணங்கள் இங்குதான் நிகழ்ந்தன. பாரீஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ்தான் வந்தார். இங்குதான் எங்கெல்ஸுடன் சேர்ந்து புனிதக் குடும்பத்தை எழுதினார். இங்குதான் அவருடைய இரண்டாவது மகள் லாரா பிறந்தாள். புரோதோன் எழுதிய வறுமையின் மெய்யறிவுக்கு பதில் தரும் விதமாக மார்க்ஸ் ‘மெய்யறிவின் வறுமை’ எழுதியதும் இங்குதான். ஏழாண்டுகள் மட்டுமே (1843 முதல் 1849 வரை) வாழ்ந்த மார்க்ஸின் முதல் ஆண் குழந்தை எட்கர் பிறந்ததும் இங்குதான்.


அனைத்திற்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதியதும் இங்குதான் ! கிராண்ட் சதுக்கத்தில் இன்றுள்ள ஸ்வான் உணவகத்தின் மாடி அறையில் வைத்துதான் “உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்! இழப்பதற்கு உங்களிடம் எதுவுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர. ஆனால் வெல்லுவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என்று அந்த மாமேதை எழுதினார். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளைப் பார்த்துள்ள அந்த ஸ்வான் ரெஸ்டாரண்ட் பல கைகள் மாறி இன்று உணவகமாக உள்ளது. மிகப்பெரிய அந்த சதுக்கத்தில் ஸ்வான் ரெஸ்டாரெண்ட் எங்கே என்று ஒவ்வொரு கட்டிடமாகப் பார்த்து வந்தபோது, திடீரென ஒரு கட்டிடத்தில் முதல் மாடியில் பொருத்தப்பட்டிருக்கும் அன்னப்பறவைச் சிலையைப் பார்த்ததும் ஏற்பட்ட பரவசமும், சிலிர்ப்பும் இருக்கிறதே! அதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. பெரிய அன்னப்பறவை சிலையோடு புகைப்படங்களில் பின்னணியில் தெரியும் கட்டிடம் அதுதான்…


(எனது சில இடங்கள்… சில புத்தகங்கள்….. நூலில் இருந்து)
( 94421 82038 – [email protected])

Spread the love