September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இப்போது சத்தமில்லை…

வி.சகாயராஜா

படுத்த பாயை
சுருட்டி வைப்பதில்லை;
எடுத்த பொருளை
எடுத்த இடத்தில்
வைப்பதில்லை.
எருமை மாடுகள்!…

ஏழுமணி வரை
என்ன தூக்கம்?!
விடியும் முன்னே
எழ முடியாதோ?!
தடிக் கழுதைகள்!…

வகைவகையாய்
சாப்பிடத் தெரியும்.
சாப்பிட்ட தட்டை
அலம்பி வைக்க முடியாது.
அடிப்படை ஒழுங்கற்ற
சோம்பேறிகள்.!…

இல்லத்தில்
இப்போது சத்தமில்லை.
நிசப்தமான அறையில்
குடும்பமாய் பிள்ளைகள்
குனிந்தபடி அமர்ந்திருக்க,
பெருங்கூச்சல்காரனின்
மூச்சு நின்ற
மூன்றாம்நாள் காரியமாய்
வழிபாட்டுச் சடங்கு
நடந்துகொண்டிருந்தது.


( 9790471009)

Spread the love