எம்.ஆர்.வி. ஜீவா
ஆங்கிலம் கற்றாலோ பேசினாலோ மட்டுமே அறிவுள்ளவர்கள் என்ற சிந்தனை பாமரர்கள் மத்தியிலும் மேலோங்கியுள்ளது என்பது வேதனைக்குரியது. தாய்மொழியில் கற்கும்போதுதான் சுயசிந்தனை வளரும் என்று மொழியியல் வல்லுநர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தாய்மொழியில் கற்றவர்கள் சிறப்பு நிலையை எய்தியிருக்கின்றனர் என்பதுதான் உலக நாடுகளின் அனுபவம். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சி.வி.ராமன்,எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய விஞ்ஞானிகள் தமிழ்வழியில் கற்றவர்கள்தான்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வைரமுத்து, பா.விஜய் போன்ற கவிஞர்கள் எல்லாம் தாய்மொழியில் படித்தவர்களே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ்மொழியை சிறப்பாக உள்வாங்கியதினால்தான் அவரது படங்களை ஐந்து ஆண்டுகள் திரையிட்டு ஆராய்ச்சி செய்து அன்னாருக்கு செவாலியே பட்டம் சூட்டி மகிழ்ந்தது பிரான்ஸ் நாடு. தமிழை வளர்ப்போம்.. தமிழைக் கொண்டாடுவோம்..
-தொடர்புக்கு : 9944087578
More Stories
நடக்கவோ… பறக்கவோ..
வகுப்பறைக்குள்ளே ஒரு போட்டி..!
தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் குழு… வரவேற்போம்!