January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இனி, அடுத்த ஓட்டம்தான்…

நம்ம நாடு போற போக்கு சரியில்லை…
இதை கேக்காம போனாக்கா
இருக்குது பாரு பெருந்தொல்லை.

ஆட்சியைப் பிடிப்பதே பிஜேபி-யின் வேலை…
காலை வாரிவிட்டு ஏறி உட்கார்ந்ததுமே
நாட்டைத் துண்டாடுவதே முதல் வேலை.

காஷ்மீர் உரிமைகளைப் பறிச்சாச்சு…
மக்கள் உரிமைகளைப் படுகுழியில்
ஒரே நாடுன்னு சொல்லிப் புதைச்சாச்சு.

அஸ்ஸாம் மேலேயும் கையை வச்சாச்சு…
அடுத்தடுத்த வேலைகளை அசராம
அங்கேயும் கொளுத்திப் போட்டாச்சு.

வங்கியா, எல்ஐசியா பூட்டைப் போடு…
அம்பானியோ, அதானியோ
அவங்க கையிலே தூக்கிப் போடு.

ஜிஎஸ்டிங்கிற பேர்ல புதுப்புது வரி…
நொடிஞ்சுப்போய் கிடக்கிற
சிறுதொழில்களோட கழுத்தை நெறி.

யாரு குரல் கொடுத்தாலும் கேட்காதே…
சட்டத்தின் பேராலே தூக்கி உள்ளே வச்சு
உசிரோட வெளியே விடாதே.

எரிபொருள் விலையை ஏகமா ஏத்துனீங்க…
ஓங்கி ஒரு அடி விழுந்ததும்
பெட்ரோல் விலையைக் குறைச்சீங்க.

நினைச்சதையெல்லாம் செய்யப் பார்க்கிறீங்க…
மக்கள் நினைச்சிட்டா அய்யோ போதும்சாமின்னு
நாட்டை விட்டே ஓட்டம் எடுப்பீங்க…

மு.முருகேஷ் (94443 60421)

Spread the love