September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இந்தியப் பொருளாதாரம் .. வரலாறு காட்டும் வழிகள்

மால்கம் ஆதிசேசய்யா கட்டுரைகள்


தொகுப்பு: ஆ.அறிவழகன் / வெளியீடு: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்..79 இரண்டாவது மெயின் ரோடு, காந்தி நகர், அடையார், சென்னை 600 020/ விலை: ரூ.250/-

மால்கம் ஆதிசேசய்யாவை கல்வியாளராகவும், பொருளாதார வல்லுனராக மட்டுமே நாம் அறிவோம். அவர் சிறந்த நிர்வாகியாக, இதழாளராக, நடுநிலை ஆய்வாளராக, தொலைநோக்குத் திட்டங்களின் நாயகராகத் திகழ்ந்துள்ளார் என்பதை நாம் அறிய உதவிடும் அரிய நூல் இது. பன்முக ஆளுமையான மால்கம், யுனெஸ்கோ நிறுவனத்தில் இருபதாண்டு காலம் அரும் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பியதும் சென்னையின் அடையாளமாக விளங்கிடும் ‘ஆயனசயள ஐளேவவைரவந டிக னுநஎநடடியீஅநவே ளுவரனநைள’ (ஆஐனுளு) எனும் ஆராய்ச்சி நிறுவனத்தை தன் சொந்த உழைப்பால் நிறுவினார். ஐம்பதாண்டுகளைக் கடந்து இந்நிறுவனம் வேளாண்மை, தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, மக்கள் தொகையியல் ஆகியன குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறது. இன்று அதிகம் பேசப்படும் பொருளாகியுள்ள மதச்சார்பின்மை குறித்தும் மால்கம் தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்துள்ளது மிகப் பொருத்தமாகிறது. மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க நாம் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று மால்கம் இரண்டினைச் சுட்டிக்காட்டுகிறார். நம்முடைய பெயர்களுடன் மத, சாதிப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதோடு தலைப்பாகை, குல்லாய், சிலுவை போன்ற மத அடையாளங்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். பல்வேறு தலைப்புகளில் மால்கம் அவர்களின் தேர்ந்தெடுத்த தமிழ்க் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மால்கம் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு இன்றைய தலைமுறையினருக்கு பெருமளவில் உதவிடும். ஆராய்ச்சிப் பணி எவ்விதம் பக்கச் சார்பில்லாமலும், துல்லியமாகவும் இருந்திட வேண்டும் என்பதை மால்கம் எழுதியுள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. தர்க்க ரீதியான சிந்தனையை எந்தவித அச்சமோ, சார்போ இல்லாமல் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதை மால்கம் அறிவுறுத்துகிறார். ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டிய நூலிது.

-பேரா. பெ.விஜயகுமார்

Spread the love