ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ கிளம்பும்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயம்
“சில நூறு மாணவர்கள் தங்களை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இவர்கள் என்னிடம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள்தான் நாளை இவர்களை நாட்டின் பொறுப்புள்ள ஆசிரியர்களாகவோ, மருத்துவர்களாகவோ, பொறியாளர் களாகவோ, அதிகாரிகளாகவோ, அரசியல்வாதிகளாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கப் போகின்றன. இவர்களின் எதிர்காலமே என் கையில்தான் அடங்கியுள்ளது. அதே போல, நான் இவர்களிடம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள்தான் என்னை மேலும் சிறந்த ஆசிரியராக மாற்றப் போகின்றன. எங்களுடைய சந்திப்பு பயனுள்ளதாக, உயிரோட்டம் உள்ளதாக அமையட்டும்”.
இந்தக் கண்ணோட்டத்தோடு கல்வி நிலையத்திற்கு ஆசிரியர்கள் சென்றால், அவர்களது வேலை சுமையாக இராது. மாறாக, மனநிறைவும் பெருமகிழ்ச்சியும் அளிக்கக் கூடிய பணியாக மாறிவிடும்.
ஆசிரியர் தினச் செய்தி
Spread the love
More Stories
நிறப்பிரிகை 4
உள்ளத்தோடு உரையாடுதல்
அம்பது நாளில் அம்பானி ஆவது எப்படி?
பலரது வாழ்வைச் சிதைக்கும் உபா சட்டம்