அவரைப் போல் நல்லவர் ஒருவர்
இந்த அவனியிலே கிடையாது.
கூவிக் கூவி விற்றாலும்
அவர்மேலுள்ள ஒரு கறையும் மறையாது.
வானொலி உரையில் போடுவார்
எப்போதும் வாய்ப்பந்தல்.
போராடும் விவசாயியைக் கண்டாலே
வாய்மூடிக் கொள்ளுவார்.
காணொளிக் காட்சியில்
கனிவுடன் கலந்துரையாடுவார்.
செய்தியாளர்கள் கேட்டால் மட்டும்
காதில் விழாது நழுவுவார்.
எதைக் கேட்டாலும் உடனே
ஏழை வீட்டுப்பிள்ளை நான் என்பார்.
ஆனால் எப்போதுமே
பெருமுதலாளிகளின் நண்பனாயிருப்பார்.
ஏர் இந்தியா விற்பனைக்கென்று
ஏகாந்தமாய் முழங்கினார்.
வேண்டிய மட்டும் ஆதாயம் பார்க்கவே
வேண்டியவர்களுக்கு வழங்கினார்.
ஆயிரம் ரூபாய் கடன் செலுத்தாத
ஏழையின் கழுத்தை நெறிப்பார்.
பல்லாயிரம் கோடிகள் கடன் என்றாலும்
அதானி குழுமத்துக்கே அள்ளிக் கொடுப்பார்.
கூறுபோட்டு எல்ஐசி-யை விற்கவே
போட்டு வருகிறார் பல திட்டங்கள்
இவரை வீட்டுக்கு அனுப்பாவிட்டால்
நாட்டுக்கேற்படும் பல நட்டங்கள்…
- மு. முருகேஷ் (94443 60421)
More Stories
அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!