August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் அட்டகாசம்!

ஜ தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை : அரசின் ஆணைகளையும், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல் முறைகளையும் துச்சமென மதிக்கும் இக்கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களிடம் நன்கொடை என்ற பெயரில் பணம் பறிக்கிறது. உரிமைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களை மிரட்டுகிறது.. சாதி, மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது.
ஜ எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை : மாணவர்களிடம் கட்டணக் கொள்ளை.. அதைத் தட்டிக் கேட்கும் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என இதன் அராஜகம் தொடர்கிறது. நிர்வாகத்தின் அநியாய வசூலைத் தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை தற்காலிகப் பணிநீக்கம், பணிமேம்பாடு தடை போன்ற நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கி வருகிறது.
ஜ மதுரை சமூக அறிவியல் கல்லூரி : ஆசிரியர், அலுவலர்களிடமிருந்து தண்டத்தொகை வசூலித்தல், அவர்களை பணியிடை நீக்கம், பணிநீக்கம் செய்தல் போன்ற தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது இக்கல்லூரி.
ஜ டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி, இளையாங்குடி : கல்லூரியின் பொன்விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆசிரியரும் மூன்றரை லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கட்டாய வசூலைத் தொடங்கியுள்ளது. கொடுக்க மறுக்கும் ஆசிரியர்கள் மீது நிரந்தரப் பணி நீக்கம், தற்காலிக பணிநீக்கம், ஊதிய உயர்வு வெட்டு, பணி மேம்பாடு மறுத்தல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ஜ அமெரிக்கன் கல்லூரி, மதுரை : மாணவர்களிடமிருந்து கூடுதலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் வசூலிக்கிறது. நிர்வாகத்தின் அராஜகப் போக்கினை, அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தும் அச்சுறுத்தியும் நிர்வாகம் பிரச்சனைகளைச் சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறது.
ஜ டி.பி.ஜெயின் கல்லூரி, சென்னை : அரசு உதவி பெறும் இக்கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றி கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. 2020-21 ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தவில்லை. இதன் மூலம் வருடத்திற்கு 1500 ஏழை எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் கல்வி வாய்ப்பை மறுத்துள்ளது. சுயநிதி பிரிவில் 11 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தனியார் கல்லூரி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து அம்முயற்சியை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இக்கல்லூரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். -பெ.விஜயகுமார்

Spread the love