January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அரசியல்.. மழை – வெள்ளம் செய்திகளை மறந்து கொஞ்சம் வாய்விட்டு சிரிப்போம்!

# என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! 

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

………………………………………………………………

# படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்யப் போறே?

புக்கை மூடிடுவேன்!

………………………………………………………………

#காலில் என்ன காயம்?

செருப்பு கடித்து விட்டது

பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

……………………………………………………..

# குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?

தெரியல, குளிக்கும்போதே துவட்ட முடியாதே!

……………………………………………………………..

# இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?

என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடணும்!

…………………………………………………………………

# டேய்! ஒரு 10 ரூபாய் இருந்தா கொடு

என்னிடம் சுத்தமா இல்ல

பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

…………………………………………………………..

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?

கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

……………………………………………………..

# சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.ஏ.

சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து.. அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

………………………………………………………..

# இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய

மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

# உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே !

வருத்தப்படாதே ! ஃபீல் பண்ணாதே !

உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !

# மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?..

ஐந்து கேள்விப்பா..

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?..

முதல் மூணும், கடைசி இரண்டும்..

வெரிகுட் கீபிடப்…

# டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???

# என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?..

டாக்டர்தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்..

# நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்…

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் …

# ஒரு காப்பி எவ்வளவு சார் ?..

5 ரூபாய்..

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?…

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!!

# உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு….

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..

# தனியாக சிரிக்க வேண்டாம். குடும்பத்துடன் கூடி இருந்து சிரித்து மகிழுங்கள்!! 

Spread the love