June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

ஆசிரியர்: மு.முருகேஷ்
அகநி வெளியீடு, வந்தவாசி. விலை: ரூ.120/-
முப்பதாண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வரும் மு.முருகேஷ் புதிய ஆசிரியன் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். புதுக்கவிதை, ஹைக்கூ, குழந்தை இலக்கியம், சிறுகதை, கட்டுரை என்று பல இலக்கிய வகைமைகளிலும் சாதனை படைத்துவருபவர். இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள முருகேஷ் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதையும் வென்றுள்ளார். கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, ச.மாடசாமி ஆகியோர் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில் சிறுவர்களுக்கான 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
‘யாழினி தந்த பரிசு’ கதையில் அம்மாவுக்கு மகள் கொடுக்கும் பரிசினைப் பார்க்கிறோம். ஏழைப் பெண் யாழினி வாசிப்பை நேசிக்கிறாள். கோவிலுக்கும், ஓட்டலுக்கும் போவதைவிட நூலகத்துக்குப் போவதையே விரும்புகிறாள். அவள் படிக்கும் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவளின் தாய் ஐம்பது ரூபாய் மட்டுமே தன்னால் தரமுடியும் என்றதும் தனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை வாங்கிக்கொள்கிறாள். நொறுக்குத் தீனி வாங்காமல், தான் சேமித்துவைத்திருந்த இருபது ரூபாய்க்கு அம்மாவிற்கு ஒரு புத்தகம் வாங்குகிறாள். படிக்கத் தெரியாத எனக்கு எதற்கு புத்தகம் என்று யாழினியின் அம்மா கேட்டதும் எங்கம்மாவுக்கு கதைகளை நான் படிச்சிச் சொல்வேனே… என்கிறாள்.
காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி கதையில் சற்றும் எதிர்பாராத முடிவினைப் பார்க்கிறோம். பாட்டுப் போட்டியில் பரிசினை வெல்வது காக்கா. காட்டின் அனைத்து விலங்குகளின் பாராட்டுதலோடு பாட்டு ராணி பட்டத்தையும் பெறுகிறது காக்கா. தொகுப்பின் கதைகளுக்குப் பொருத்தமான படங்களை தேவகோட்டை தெ பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்திட அகநி பதிப்பகம் நூலினை நேர்த்தியாகக் கொணர்ந்துள்ளது
-பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்:

Spread the love