September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அதிகரித்து வரும் வேலையின்மையும் சரிந்து வரும் பொருளாதாரமும்

ஐ.வி. நாகராஜன்
கடந்த சில மாதங்களில் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்துவரும் வேலையின்மையானது சாமானியர்களின் வாழ்க்கையை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ என்ற அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் இன்னொரு பக்கம் மக்களைப் பரிதவிப்புக்கு ஆளாக்கியுள்ளன.
வேலை இல்லாத் திண்டாட்டம் வழக்கத்திற்கு மாறாக உச்சபட்ச அளவை எட்டியிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் குறைந்த பட்சம் 10 லட்சம் பேர் வேலை இழப்பைச் சந்தித்துள்ளனர். தேவையான அளவிற்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிலையில் பொருளாதாரச் சூழல் இல்லை. முதல் அலையில் நகர்ப்புற வேலைவாய்ப்புகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் இரண்டாம் அலையில் ஊரகப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிறு, குறு தொழில்கள் விரைவில் மீண்டு எழ வாய்ப்புகள் இல்லை.
கடந்த காலத்தில் இல்லாத பொருளாதார சரிவை நாம் இப்போது சந்தித்து வருகிறோம். நம் தேசத்தின் மதிப்பு கடந்த 2 நிதியாண்டுகளாக நிலை குலைந்து போய் நிற்கிறது. காரணம் நிச்சயமாக கொரோனா மட்டும் இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன் ஏழ்மை நிலை சற்று உருமாறி நடுத்தர மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
1979-80 கட்டத்தில் உள்நாட்டு வளர்ச்சி 5.2 சதம் இருந்தது. அப்போது உலகத்தின் பார்வையில் இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு இல்லை. பின்னர் உலக பொருளாதாரத்தின் சக்திமிக்க வளரும் நாடாக இந்தியா மாற்றம் அடைந்து வந்தது. உலகத்தின் எந்த மூலையில் எந்த பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் மிகப்பெரிய சந்தை இங்கே காத்திருக்கும் நிலை தோன்றியது.
இந்தியப் பொருளாதாரத்திற்கு முதல் அடி 2016-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டு தடையில் வந்தது. அடுத்த அடி திட்டமிடப்படாத, இன்று வரை முறையாக நிர்ணயிக்கப்படாத, ஜிஎஸ்டி வரியால் வந்தது. கொரோனா காரணமாக, ஏற்கனவே நொறுங்கிப்போய் இருந்த தொழில்துறை முற்றிலும் முடங்கி சுருண்டு விட்டது.
தேசத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றும் விவசாயமும் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகப் போராடி வரும் வேளாண் மக்களை அழைத்துப் பேசி அவரசகதியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ள மோடி-அமித் ஷா அரசு தயாராக இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு வளர்ச்சி சரிந்து கொண்டே வருகிறது. இதன்பாதிப்புஇனிவரும்5 ஆண்டுகளில் இன்னும் கடினமாக எதிரொலிக்கும்என்று பொருளாதாரவல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.ஏற்கனவே ஏராளமான மக்கள் வேலை இழந்து விட்டார்கள். வேலை இழப்பு,சிறு, குறு தொழில்நிறுவனங்கள்மூடல் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் போய் மனப்புழுக்கம் வந்துவிட்டது. நடுத்தர மக்கள் மெதுவாக மேல்தட்டு மக்களாகமாற்றப்பட்டுவந்த நிலை தலைகீழாக மாறி வருகிறது. 23 கோடி மக்கள்ஏழைகளாகமாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
2007-12 காலகட்டத்தில் உலகம் முழுவதுமே பொருளாதார தாக்கத்தில் வீழ்ந்தபோது நமது தேசத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் தாங்கிப் பிடித்த வங்கி, ரயில்வே, காப்பீடு போன்ற அனைத்துபொதுத்துறை நிறுவனங்களும்தனியார்களிடம் விற்கப்படும் நிலையை மோடி அரசு உருவாக்கிவிட்டது.
மக்கள் ஆட்சியை மக்களுக்கான ஆட்சியாகவும் மாநில உரிமைகளை மதிக்கக்கூடியஆட்சியாகவும் நிர்வகிக்கக்கூடிய ஒன்றிய அரசுதான் இப்போது நம் நாட்டுக்குத் தேவை
(தொடர்புக்கு : 9787368271

 

Spread the love