September 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அதிகம் கவனத்திற்குள்ளாகாத செய்தி.

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது சமீபத்திய செயல்பாடுகளில்  முக்கியமானவை புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆதார் எண்கள் வழியாக வாக்காளர் பற்றிய தகவல்களை சட்ட விரோதமாக திரட்டிய காரணத்தால், ஆதார் அமைப்பு அதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டது, ஏகே ராஜன் கமிட்டி நியமனத்தை செல்லுபடியாகாது என்கிற பொது நல வழக்கை தள்ளுபடி செய்தது, தமிழில் அர்ச்சனை கூடாது, சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது என தொடர்ந்து மோடி அரசின் நிலைப்பாடுகளை எதிர்த்து சுதந்திரமாக செயல்பட்டவர். இதற்கெல்லாம் தண்டனையாக மேகாலாயாவுக்கு மாற்றல் செய்ய உச்ச நீதி மன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Spread the love