September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை

கணினித் துறையில் முதன்முதலாக நுழைந்தவர்களில் தலையானவர் அசீம் பிரேம்ஜி அவர்கள். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் அவரே, அப்பல்கலைக்கழகம் மிகப் பிற்பட்ட மாவட்டமாகக் கருதப்படும் தர்மபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தப் பல செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவியல் கல்வி, கணிதக் கல்வி ஆகியவற்றையொட்டி ஐ றடினேநச, ஹவ சுiபாவ ஹபேடநள என்ற பெயர்களில் இரண்டு இதழ்களையும் வெளியிடுகின்றது. ‘காசேதான் கடவுளடா’ என்று வாழ்பவர் இடையில் சேவையே மகிழ்ச்சி தரும் என்று பணியாற்றுபவர். அதன் ஓரிதழில் இரு பள்ளிகளில் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஈடுபடும் இரண்டு திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.
காட்டுவழி என்ற திட்டத்தின் அடிப்படையில் மருதம் பண்ணைப் பள்ளி செயலாற்றுகின்றது. பள்ளியே ஒரு வனச்சோலையாகவும், பூந்தோட்டமாகவும் அமைக்கப்பட்டு இயற்கை வழியில் கற்றல் நடைபெறுகின்றது. புவிதம் என்பது மற்றொன்று.
ச.சீ. இராஜகோபாலன்

Spread the love